இதன் பொருள் இணைப்பது, சேர்ப்பது, பிணைப்பது, அதாவது ஒருவரின் கவனத்தைஒருமுகப்படுத்துவது.
இதற்கு ஒருங்கினைதல் என்ற பொருளும் உண்டு.
உடல்,மனம், உணர்ச்சிகள், ஆன்மா ஆகியவற்றை ஒன்றிணைப்பது அல்லது ஒருமுகப்படுத்துவதே யோகக் கலை.
உடல்,மனம், உணர்ச்சிகள், ஆன்மா ஆகியவற்றை ஒன்றிணைப்பது அல்லது ஒருமுகப்படுத்துவதே யோகக் கலை.
உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, மன அழுத்தங்களை குறைத்து அமைதி தருவது.
இலக்கின்றி அலையும் மானுட வாழ்வில் இலக்கை நிர்ணயித்து சேர வேண்டிய இலக்கில் கொண்டு போய்ச் சேர்க்க யோகா ஒரு சிறந்த ஆன்மீக மார்க்கமாகும்.
ஆன்மீக வாழ்வில் இலக்கை எட்ட யோகாவின் குறிகளை பின்பற்றவேண்டியது அவசியம். அந்த குறிகளில் மூன்றுதான் சுகாதாரமான வாழ் நெறி, அற நெறி, ஒழுக்க ரீதியான சுயக் கட்டுப்பாடு ஆகியனவாகும்.
இந்த மூன்று விதிகளையும் கடைபிடிப்பதால் ஏற்படும் விளைவுகள் அசாத்தியமானது.
இந்த கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் எந்த ஒரு மனிதனும் தன் மனதை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.
இது நமது ஆன்மீகச் சிந்தனையை திறக்கும்.
மனமும், ஆன்மாவும் ஒத்திசைவு கொண்டால், உடலும் அதற்குக் கட்டுப்பட்டு இயங்கும்.
யோக மார்க்கத்தை கடைபிடிக்க துவங்கினால் நாளடைவில் ஒருவர் தனது மன நிலையில் ஏற்படும் அதிசய மாற்றங்களை நன்றாக உணர முடியும்.
மாறும் வாழ் நெறி இந்த மாற்றங்களை நமக்கு அறிவுறுத்தும்.
No comments:
Post a Comment